இந்நேரத்தின் தேவை உண்மைத்தன்மை கொண்ட நடாக மாறுவதேயாகும்.

எதிர்பார்க்கப்படும் மாற்றத்திற்கான காரணிகளாகச் செயற்ப்பட்டு, உண்மைத்தன்மையை நிலைநிறுத்துவதன்மூலம், இலங்கையை மேம்படச் செய்ய விரும்பும், படித்த பொது மக்களை உள்ளடக்கிய, கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள், தொழில், வணிகத் தலைவர்கள் ஆதியோருக்கான அழைப்பு இது.

இதயசுத்தியுடன்  சிந்தித்துப் பார்க்க வேண்டியவை


போர்

  • முப்பதாண்டுகளுக்கும் மேலாக முன்னெடுக்கபட்டதும் ஆயிரக்கணக்கான இளம் இலங்கையர்கள் வாழ்க்கையைக் காவுகொண்டதுமான இரத்தக்களரி கண்ட போருக்கான அடிப்படைக் காரணங்கள், கண்டறியப்பட்டு தீர்த்து வைக்கப்பட்டனவா?

  • இன முரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணங்களும், குறைகளும், கண்டறியப்பட்டுத் தீர்த்து வைக்கப்படாது மூடிமறைக்கப்பட்டால், மற்றொரு எழுச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. அதன் வடிவம் எப்ப்டியிருக்குமென்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

    இந்த விடயத்தில் நாம் செய்தவையைப் பார்க்க

மதக் கொந்தளிப்பு

  • தேசியம் என்ற போலிப் போர்வையில், சிறுபான்மை இன மதக் குழுக்களை, தீவிரவாதக் குழுக்கள் தாக்கியும், சொத்துக்களை அழித்தும்,  பாரபட்சப்படுத்துவதை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கப்போகிறோமா?

பணம்

  • இலஞ்சம் நம் நாட்டில் நான்காவது மொழியாக மாறிவிட்டது. நமது குழந்தைகள், ஆங்கிலத்தில் எப்படி ஆட்சிகொண்டிருக்க வேண்டுமோ, அதே அளவுக்கு இலஞ்ச மொழியிலும் தேர்ச்சியும் சரளமும் பெற்றிருக்க வேண்டும் என்று விரும்புகிறோமா? நம்மில் பெரும்பாலானோர் இலஞ்சத்தில் ஈடுபடவில்லை என்று நம்புகிறோம், காரணம் நாம் மிகவும் புத்திசாலித்தனமாக அதை அழுக்கு வேலை செய்யும் வெளியொரு பாவ ஆன்மாவின் தலைமேல் கட்டி, ஒதுங்கிக்கொள்கிறோம்.

  • வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் கொண்டே வருகிறது, கட்டுப்பாடற்றுள்ளது. இது நம் சக குடிமக்கள் அனைவரையும், முக்கியமாக குறைந்த வருவாய் மக்களை அதிகம் பாதிக்கிறது.  தனியார்நிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) இயக்ககங்கள் எதனாலும்  இந்தப் பிரச்சினையை வெற்றிகரமாகத் தீர்க்க முடியவில்லை. வியாபாரத்துறையில் இருப்பவர்கள்கூட அதன் தாக்கத்தை  உணர்கிறர்கள்.

  • இலஞ்சம் இடம்பெறும் சந்தர்ப்பங்கள் மற்றும்  இலஞ்சம் கொடுத்து, பெற்று குற்றம்புரிபவர்களை அம்பலப்படுத்த எடுக்கக்கூடிய வெளிக்கொணர்தல்முறை , என்பன பற்றி  சமூக, பாரம்பரிய ஊடகங்கள் மூலம், பொதுமக்களுக்கு,  அறியத்தர  வேண்டும்

விபச்சாரம்

  • விபச்சாரம் வேகமாக வளர்ந்து வருகின்றது. விபச்சாரம் என்பது எங்கெங்கும் முளைவிட்டுள்ள  ஆயிரக்கணக்கான உருவுதல் மையங்களின் பின்புலத்தில் உள்ளன. இன்று, உருவுதல் மையங்கள் ‘ஹிட்’ விளம்பரத்தில் முதல் ஐந்து விளம்பரதாரர்கள் மத்தியில் உள்ளன. விபச்சாரம் செய்ய அடிப்படைக் காரணம் வறுமையே, என் நண்பர்களே

விவசாயிகள்

  • ​நமது விவசாயிகள் எப்போதும் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களிடமிருந்து ஒரு மோசமான பேரத்தையே பெற்றிருக்கிறார்கள். ஒன்றில் அவர்களின் விளை பொருட்கள் சரியான விலையில் வாங்கப்படுவதில்லை அல்லது அவற்றை விளைவிக்கத் தேவையான உரம் தண்ணீர் சரியான நேரத்தில் தரப்படுவதில்லை;

அநீதி

  • நீதியை எதிர்பார்த்து நீதிமன்றத்திற்கு செல்கிறோம். ஆனால், உண்மையில் நாம் சரியான முறையில் நியாயம் பெறுகின்றோமா, பணம், வயது இரண்டையும் இழந்தபின்பும்  முடிவில் அது கிடைகின்றதா? ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், நமது நீதி அமைப்பில் ஏற்பட்ட தாமதங்களை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டன. வழக்காடியவர்கள் ஆயிரக்கணக்கானோர், முறையான நீதி கிடைக்காமலேயே  கல்லறை சென்றுள்ளனர்.

  • நிழல் உலகம் அல்லது குண்டர்  கும்பல்கள் உள்ளன. காரணம் அரசியல்வாதிகளோடு தொடர்பு கொண்ட  போதைப்பொருள் பிரபுக்களாலோ அல்லது அது போன்ற வேறு சிலராலோ அவர்கள் வியாபாரத்தில் தக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். .

  • சிறைச்சாலைகளில், சிகரெட்டிலிருந்து போதைப் பொருட்கள் வரை மற்றும் துப்பாக்கிகளை, சரியான விலை கொடுத்தால்  கைதிகள் பெற்றுக்கொள்ள முடியும் என்ற அளவுக்கு ஊழல் மலிந்துள்ளது. . சிறையிலடைக்கப்பட்டுத், தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் தீமை செய்ய கூடிய அனைத்து பொருட்களும் அவர்களுக்குக் கிடைக்குமெனின், கைதிகளை சீர்திருத்தி அவர்களை சிறந்த குடிமக்களாக ஆக்க முடியாது என்றால், எங்களைப் போன்ற மக்கள் மீது அரசாங்கம் வரிகளை திணித்து, சிறைச்சாலை முறைமைகளை வைத்திருப்பதன்  நோக்கம் என்ன? சீர்திருத்தம், தடுத்தல் ஆகியவை ஒரு தவறைத் தண்டிப்பதன் மூலம் சாதிக்கப்பட வேண்டும். ஆனால் சிறையில் நடப்பவை இது சாத்தியப்படுவதற்கான  சந்தர்ப்பங்களை  அரிதாக்குகின்றன.

  • காவல்துறை உள்ளிட்ட பொதுத்துறை, நியாயமற்ற அரசியல்வாதிகளின் கையில் பொம்மைகளாக மாறியுள்ளன. காவல்துறை அதிகாரிகள் உட்பட அரச துறை ஊழியர்கள், யாரை இடறுகிறாகள் என்று கவலைப்படுவதை விடுத்து, கண்ணியமாகவும் தலைநிமிர்ந்து பெருமையாகவும் தங்கள் கடமைகளை நிறைவேற்ற முடியும் எனும் நிலையை மீண்டும் ஏற்படுத்தவேண்டும்.

கடன்பட்டுள்ள ‘ஏழை பொதுமக்களின்’ சுமையை இலகுவாக்குதல்

  • புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிராமங்களில், பல வடிவங்களிலும் நுழைந்துள்ள பொறுப்பற்ற கடன்கொடு நிறுவனங்களின் செயலினால்,  நாடு முழுவதும் கடன்பட்டுள்ள ஏழை மக்கள் ஆயிரக்கணக்கானோர் பரந்து உள்ளனர்

 

எங்கள் சிறு தொழில்முனைவோரை உருவாக்குதல்.

  • COVID-19 தொழில்முனைவோரை குறிப்பாக சிறு தொழில்முனைவோரை மிகவும் மோசமாக பாதித்துள்ளது.

  • வங்கிகள் மூலம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் திட்டங்கள் இந்த தொழில்முனைவோருக்கு சாதகமாக இருக்கவில்லை, காரணம் அவர்களிடம் கடனுக்கு ஈடுகொடுக்கப்  போதுமான சொத்துக்களில்லை;

  •  துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும்பகுதி இந்த சிறு வணிகங்களின் கைகளில் உள்ளன, இதுபோன்ற தொழில்களைப் பாதுகாப்பதும் பலப்படுத்துவதும் மிக முக்கியமானது.

தொடர்பு படிவம்

ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ள தயங்க.

மின்னஞ்சல்
avankalanka@gmail.com

தொலைபேசி எண்
(+94) 77 249 7739