LM-Main

லசந்த மெண்டிஸ்

நிறுவுனர்

தொழில்முறை பின்னணி

தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியைக் கொள்ளுப்பிட்டி புனித. தாமஸ் ஆரம்பப்பள்ளி, மற்றும் ஸ்ரபோர்ட் சர்வதேசப்பள்ளி ஆகிய இடங்களில் முறையே முடித்த 18 வயது லசந்த, 1988 ல் ஏன்ஸட் கிரிண்ட்லேஸ் வங்கி பிஎல்சி என்ற இடத்தில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.

1989 முதல் 2000 வரை கொழும்பிலும், புறநகர்ப் பகுதிகளிலும் செலான் வங்கியில் சேவை செய்தபோதும், பிற்காலத்தில் பிரமுக்கா வங்கியிலும் சிறுகடன் வழங்கும் பணியில் ஈடுபட்டார்.

2002 முதல் 2009 வரை, அவர் Llஜெயா மைக்ரோ பைனான்ஸ் லிமிடெட்  நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குனராக இருந்தார்.

2010ல் நிறுவப்பட்ட, ஸ்ரீலக்ஜெயா கிரெடிட் ப்ளஸ் லிமிடெட் நிறுவனத்தில், லசந்த தற்போது செயல்முறை ஆலோசகராகப் பணியாற்றுகிறார்; லங்கா லயன்ஸ் அறக்கட்டளையின் நுண் கடன் நிகழ்ச்சித் திட்டத்தை நிர்வகித்தல், இந்நிறுவனத்தின், ‘உள்ளடங்கிய நிதி' தீர்வுகளை ஊக்குவிப்பது தொடர்பாக, வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆலோசனைச் சேவைகளை வழங்குதல் ஆதியவற்றில் ஈடுபட்டு வருகிறார்.

யஃவெஹ் ஹோல்டிங்ஸ் லிமிட்டட் மூலம், லசந்த ஒரு மொழி உதவிஅழைப்பு மையத்தை இயக்கி வருகிறார். இது, 2011 முதல், முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கையடக்கத் தொலைபெசியைப் பயன்படுத்துவோருக்கு பிரத்தியேக மதிப்புக்கூட்டு சேவையைத் தந்து வருகிறது.

 

தனிப்பட்ட வாழ்க்கை

லசந்தவின் வயது 50 ஆகும். திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் கொழும்பு ராஜகிரியவில் வசித்து வருகிறார்.

இவர் கொள்ளுப்பிட்டி  புனித. தாமஸ் ஆரம்பப்பள்ளி, (1976 முதல் 1986) மற்றும் கொழும்பு 07  ஸ்ரபோர்ட் சர்வதேசப்பள்ளி, (1987 to 1988) ஆதிய பாடசாலைகளின் மாணவராவர்.

லசந்த ஒரு கிறிஸ்தவர், அவரது தேவாலயத்தில் செயலூக்கமான பாத்திரம் வகிக்கின்றார். ஏழைகள், ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு, அவர் இதயம், இனம், சாதி மத வேறுபாடுகளைக் கடந்து, சேவைசெய்வதற்கு ஒரு அடி அதிகமாகவே எடுத்து வைக்கும்.

இந்த நாட்டின் அமைப்பை மாற்றுவதில் உணர்வுபூர்வமாக ஈடுபட்டுள்ளார். தனது செல்வாக்கில் உள்ள அனைவரையும் இந்த முயற்சியில் சேர்த்து மற்றவர்களையும் சேர்த்துக் கொள்ளுமாறும் அழைப்பு விட்டுள்ளார்.