தாய்நாட்டின் மகள்களை காப்போம்

தாய்நாட்டின் சிறுபெண்களிடையே விபச்சாரம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. பல வடிவங்கள் பல வண்ணங்களில் ‘SPA ' என்ற போர்வையின் கீழ் எங்கும் முளைவிட்ட ஆயிரக்கணக்கான ‘உருவுதல் நிலையங்கள்’ விபச்சாரத்தின் நுழை வாயில்களாக உள்ளன. இன்று, உருவுதல் மையங்கள் ‘ஹிட்’ விளம்பரத்தில் முதல் ஐந்து விளம்பரதாரர்கள் மத்தியில் உள்ளன. விபச்சாரம் செய்ய அடிப்படைக் காரணம் வறுமையே, என் நண்பர்களே இதற்கு இரையாகி விட்ட பெண்கள், பசுமையான வாழ்வு பெற, தொலைதூர கிராமங்களிலிருந்து கனவுடன் வருபவர்களே.

செயற் திட்ட்ங்கள்

  • கையில் பேனாவை எடுத்து, இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில், விழிப்புணர்வை ஏற்படுத்த, மகளிர் விவகார அமைச்சு, பெண்கள் பணியகம் போன்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன், இது பற்றி எழுதுவதன் மூலம் தொடங்குவோம்

  • மீட்கப்படும் மகள்களுக்கு தங்கு வீடுகள் அல்லது மீட்பு மையங்களை அமைப்பது, எமது அடுத்த முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

  • மாற்று தொழில்களில் இந்த இளம் பெண்களை ஈடுபடுத்துவது நமது இன்னொரு சவாலாகும்.

  • இவ்விடயத்தில் ஆர்வம் உள்ளவர்கள் எங்களுடன் கைகோர்த்துத் தாய்நாட்டின் மகள்களை விடுவிப்பதற்கு உழைக்க அழைக்கின்றோம்.