கைதிகளுக்கு நம்பிக்கை

சிறைச்சாலைகளில், சிகரெட்டிலிருந்து போதைப் பொருட்கள் வரை மற்றும் துப்பாக்கிகளை, சரியான விலை கொடுத்தால் கைதிகள் பெற்றுக்கொள்ள முடியும் என்ற அளவுக்கு ஊழல் மலிந்துள்ளது. சிறையிலடைக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் தீமை செய்ய கூடிய அனைத்து பொருட்களும் அவர்களுக்குக் கிடைக்குமெனின், கைதிகளைச் சீர்திருத்தி அவர்களை சிறந்த குடிமக்களாக ஆக்க முடியாது என்றால், எங்களைப் போன்ற மக்கள் மீது அரசாங்கம் வரிகளைத் திணித்து, சிறைச்சாலை முறைமைகளை வைத்திருப்பதன் நோக்கம் என்ன? சீர்திருத்தம், தடுத்தல் ஆகியவை ஒரு தவறைத் தண்டிப்பதன் மூலம் சாதிக்கப்பட வேண்டும். ஆனால் சிறையில் நடப்பவை இது சாத்தியப்படுவதற்கான சந்தர்ப்பங்களை அரிதாக்குகின்றன.

செயற் திட்ட்ங்கள்

  • அவர்களின் படைப்பாற்றலையும், பிற திறமைகளையும் வெளிக்கொணரும் வகையில் வீட்டுக்கைதொழில் மற்றும் நடுத்தர அளவிலான உற்பத்தித் திட்டங்களில் ஈடுபட்டுள்ள சிறைக்கைதிகளுக்காக அவர்கள் வாழ்க்கைக்கு ஒரு புதிய பொருளையும் முன்னோக்கையும் அளிக்கும் ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும்.

  • சிறையிலும், காவல் சிறையிலும் பலர் தங்களது அபராதத்தை செலுத்த இயலாத நிலையில் உள்ளனர். இந்த அபராதங்களைச் செலுத்திவிட்டு அவர்களை விடுதலை செய்ய ஒரு அமைப்பை வகுக்க வேண்டும்.

  • விடுவிக்கப்பட்ட பல கைதிகள் மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிக்கச் சிரமப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக நிதி ஒன்றை எற்படுதுவது சரியான திசையில் அடியெடுத்து வைக்கும் முதற்படியாக இருக்கலாம்.

  • ஆர்வமுள்ளவர்களை எங்களுடன் தொடர்பு கொண்டு எங்களுடன் இணைந்து முன்முயற்சியை முன்னெடுத்துச் செல்ல அழைக்கிறோம்.